கும்பகோணம்:அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாக திகழும் சுவாமிமலையில் ஆடி மாத பௌர்ணமி கிரிவலம் இன்று (13 ம் தேதி) நடைபெறவுள்ளது. இன்று மாலை 6.30 மணிக்கு வல்லப கணபதி சன்னதியிலிருந்து தொடங்கும் கிரிவலத்தை பாபநாசம் விஸ்வநாதன் தொடங்கி வைக்கவுள்ளார். பேராசிரியர் சிவ.திருச்சிற்றம்பலம் வழிகாட்டுதலுடன் தேவாரம், பாராயண முழக்கத்துடன் கூட்டு வழிபாடு, கிரிவலம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சுவாமிமலை கிரிவல கமிட்டி தலைவர் கேசவராஜன், செயலாளர் சிவசங்கரன், பொருளாளர் சேகர் மற்றும் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.