காளையார்கோவில்: காளையார்கோவில் தர்ம முனீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது தர்ம முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 27ம் தேதி அனுக்ஞை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. முதற் கால யாக பூஜை,சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மூன்று கால யாகபூஜை,தீபாராதனை நடைபெற்றது.நேற்று காலை 7மணிக்கு நான்காவது கால யாக பூஜை,9.30 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. 9.50 மணிக்கு காளீஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றினர். மூலஸ்தானங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடைபெற்றது.ஏற்பாடுகளை பரம்பரை பூசாரிகள்,குலதெய்வ வழிபாட்டுக்காரர்கள் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.