பதிவு செய்த நாள்
01
பிப்
2016
10:02
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில், 11, ஆயிரத்து, 755 அடி உயரத்தில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற, கேதார்நாத் சிவன் கோவிலில், மூன்றாண்டுகளுக்கு முன், 6,000 பக்தர்கள் இறந்தது, லட்சம் பக்தர்கள் பரிதவித்தது போன்ற நிலை இனிமேல் ஏற்படக் கூடாது என்பதற்காக, மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. கடந்த, 2013, ஜூன், 14 - 17ம் தேதிகளில் இடை விடாது கொட்டிய பேய் மழையால், உத்தரகண்ட் மாநில நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மந்தாகினி ஆற்றின் நடுவே அமைந்துள்ள கேதார்நாத் கோவில் மூழ்கியது. நிலச்சரிவு ஏற்பட்டு, சாலைகள், பாதைகள் மூடியதால், கோவிலுக்கு புனித பயணம் சென்றிருந்த லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், பத்து நாட்களுக்கும் மேலாக தவித்தனர்.
* கோவிலை சுற்றி, ஆறு இடங்களில், ஹெலிபேடு
* தினமும் குறிப்பிட்ட அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதி
* அவர்களுக்கும், பயோ மெட்ரிக் எனப்படும் உடல் அடையாளங்கள் பதிவு கட்டாயம்
* தினமும், மூன்று வேளை, வானிலை அறிவிப்பு
* மலைச்சரிவு ஏற்படும் பகுதிகளில், கேபியான் வால் எனப்படும், வலைகளால் ஆன சுவர் அமைக்கப்படும்.