மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் சிதைக்கப்படும் சிலைகள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2016 11:02
மதுரை: மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் சுற்றுச்சுவரில் உள்ள கலைநயமிக்க புராதன சிலைகள் சிதைக்கப்பட்டு வருகின்றன. மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இக்குளம் மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் உருவாக்கப்பட்டது. குளத்தைச் சுற்றி படிக்கட்டுகளுடன் கலைநயமிக்க அன்னப்பறவை, யாழி போன்ற உருவங்கள் கற்சிலைகளில் செதுக்கப்பட்டு பொருத்தப்பட்டன. ஆண்டுதோறும் இக்குளத்தில் தெப்பத்திருவிழா நடக்கும். அப்போது தெப்பத்தை இழுக்க அதிக பலம் கொண்ட கயிறு(வடம்) பயன்படுத்தப்படும். இந்த கயிற்றை கற்சிலைகள் வழியாக இழுக்கும்போது, அழுத்தம் தாங்காமல் விழுகின்றன. இப்படி ஒவ்வொரு ஆண்டும் கற்சிலைகள் விழுவது தொடர் கதையாக நடக்கிறது. கடந்த ஜன.,24ல் நடந்த தெப்பத்திருவிழாவிலும் இதேநிலைதான். அதை சரிசெய்ய கோயில் நிர்வாகம் முன்வரவில்லை. மதுரையின் அடையாளங்களுள் ஒன்றான தெப்பக்குளத்தையும், அதன் சுற்றுச்சுவரையும் கோயில் நிர்வாகம் பாதுகாக்க முன்வரவேண்டும். உடைந்த சிலைகளை புதுப்பிக்க வேண்டும்.