பதிவு செய்த நாள்
01
பிப்
2016
11:02
மதுரை: மதுரை சத்யசாய் நகரில் ஸ்ரீசக்ர ராஜராஜேஸ்வரி பீடம் சார்பில் இரண்டு நாள் குரு ஸ்மரணம் உற்சவம் நடந்தது. கோபாலகிருஷ்ண பாகவத சுவாமிகள், பாகவத சுவாமிகள் ஆகியோரை கொண்டாடும் விதமாக நடந்த இந்நிகழ்ச்சிக்கு ராமானந்த பாரதி சுவாமிகள், ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்தனர். கணபதி பூஜை, குருபாதுகா பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. பாகவதர்கள் ராமகிருஷ்ணன், ராஜாமணி, முகுந்த் ஆகியோரால் தோடய மங்களம், குருகீர்த்தனை, பஞ்சபதி பஜனை போன்றவை நடத்தப்பட்டது. நரசிம்ம பாகவதர் உஞ்சவிருத்தி பஜனை நடத்தினார். ஸ்ரீராதா கல்யாணம், ஆஞ்சநேய உற்சவம் பாகவதர்கள் நடராஜா, அந்தர், கல்யாணராமன், ரமணன் ஆகியோரால் நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை எஸ்.எஸ்.ஆர்.எஸ். டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.