செஞ்சி: செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு ஜோதி தரிசன வழிபாடு நடந்தது. செஞ்சியை அடுத்த செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசன வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடந்தது. 6:00 மணிக்கு சிறப்பு யாகமும், 9:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதியும் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு கலச நீர் கொண்டு அபிஷேகமும், சித்தர்களுக்கு விளக்கு பூஜை நடந்தது. இரவு 10:00 மணிக்கு மகா புஷ்பாஞ்சலியும், இரவு 12:00 மணிக்கு ஜோதி தரிசன வழிபாடும் நடந்தது. இதில் அறங்காவலர் கன்னியப்பன் மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டனர். பூஜைகளை ஈஸ்வர சிவன் செய்தார்.