பதிவு செய்த நாள்
01
பிப்
2016
12:02
வீரபாண்டி: சேலம் உத்தமசோழபுரம் நெய்காரப்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிப்., 3ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, இன்று காலை, 9 மணிக்கு விநாயகர் பூஜையுடன் துவங்குகிறது. பஞ்சகவ்யா பூஜை, யஜமான சங்கல்பம், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் நடக்கிறது. மாலையில், யாகசாலை ஹோமங்கள் மற்றும் முதல் கால பூஜை நடக்கிறது. பிப்., 2ம் தேதி, இரண்டாம் கால யாக பூஜை மற்றும் பல்வேறு ஹோமங்கள் நடந்து, பிப்., 3ம் தேதி காலை, 7 மணிக்கு, நான்காம் கால பூஜையுடன் யாகசாலை ஹோமங்கள் நிறைவடைகிறது. இதையடுத்து, காலை, 9 மணிக்கு மேல், 10.30 மணிக்குள் கோபுர கலசங்கள் மற்றும் மூலஸ்தான மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தர்மகர்த்தா மற்றும் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.