செஞ்சி: செஞ்சி, கிருஷ்ணாபுரம் கொத்தமங்கலம் சாலை சுப்பிரமணியர் கோவிலில் 36வது ஆண்டு தைப்பூச விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கணபதி ஹோமம், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, காப்பு கட்டினர். அதனை தொடர்ந்து வேள்வியும், சக்திவேல் அபிஷேகமும், அலகு குத்தி லாரி, தேர் இழுத்தல், காவடி ஆட்டம், சாமி ஊர்வலமும் நடந்தது.