பதிவு செய்த நாள்
01
பிப்
2016
12:02
திருப்புத்தூர்: திருப்புத்தூர் மேலக்கோட்டை வீரஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயிலில் பிப்.,10ல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.திருப்புத்தூரைச் சுற்றி வரலாற்று சிறப்பு மிக்க கோட்டை இருந்துள்ளது.கோட்டையின் வட மேற்கு மூலையில் இந்த ஆஞ்சநேயர் கோயில் மன்னர்களால் எழுப்பப்பட்டுள்ளது. கோட்டை சிதைந்த பின்னும், இக்கோயில் மக்களின் வழிபாட்டில் பல நூற்றாண்டுகளாக உள்ளது. இங்கு பழமையான கல்வெட்டு தொல்லியல் துறையினரால் படி எடுக்கப்பட்டு கோயிலின் தொன்மையை உறுதி செய்துள்ளனர். தற்போது முதன் முறையாக ராஜகோபுரம், விமானம் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை பிப்.8ல் காலை 9 மணிக்கு வாஸ்து சாந்தியுடன் துவங்குகின்றன.தொடர்ந்து மாலையில் யாகசாலை பிரவேசித்து,வேத,திவ்ய,பிரபந்த பாராயணங்கள், அக்னி ஆராதனம், ஹோமங்கள் மூன்று நாட்கள் நடைபெறுகின்றன.பிப்.,10ல் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.காலை 10 மணிக்கு மேல் வீர ஆஞ்சநேயர் சுவாமி பிரதிஷ்டை, பகல் 11 மணிக்கு விஷேச திருவாராதனம் நடைபெறும். பின்னர் அன்னதானம், இரவில் திருவீதி உலாவும் நடைபெறும். ஏற்பாட்டினை திருப்பணிக்குழுத் தலைவர் ரெனா.துரைசிங்கம்பிள்ளை, துணைத் தலைவர்கள் ரெனா.ராமலிங்கம் பிள்ளை,நா.ஆறு.தங்கவேலு பிள்ளை, செயலாளர் என்.ராஜகோபால், இணைச் செயலர் ஆறு.நா.ராமேஸ்வரன், துணைச் செயலர்கள் மருது.சரவணன்,உதய.சண்முகம், பொருளாளர் ஆர்.வி.கே.எஸ்.சண்முகம் ஆகியோர் செய்கின்றனர்.