சேலம்: சேலத்தில், கேசரியா ஆதிநாத் ஸ்வேதாம்பர் ஜெயின் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. சேலம் சங்கர் நகரில், கேசரியா ஆதிநாத் ஸ்வேதாம்பர் ஜெயின் கோவிலில் கடந்த, 22ம் தேதி முதல் கும்பாபிஷேக விழா நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் கோவிலில் சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடந்து வந்தது. நேற்று காலை, கும்பாபிஷேக விழா புனித கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து பகவான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. சென்னை, பெங்களூரு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான ஜெயின் மதத்தினர் விழாவில் பங்கேற்றனர்.