ஆந்திர மாநிலத்தில் அடிலாபாத் பகுதியில் அண்மைக் காலங்களில் அனுமன் வழிபாடு பிரபலமாகி வருகிறது. அண்டை மாவட்டமான கரீம் நகரில் இருந்து இது இங்கு பரவியது. அடிலாபாத்தில் மேன்செரியல் நகரில் கிராஸ்ரோடில் முப்பத்தாறு அடி உயர அனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது. கடந்த இரண்டாண்டுகளில் இந்த நகரில் மட்டும் சுமார் இருபத்தைந்து புதிய அனுமன் கோயில்கள் உருவாகியுள்ளன. இப்பகுதி இளைஞர்கள் அனுமனுக்கு நேர்ந்து கொண்டு மாலை போட்டு தாடி வளர்த்து. மது அருந்தாமல், புகை பிடிக்காமல் நாற்பத்தொரு நாட்கள் விரதமிருந்து மே மாதம் நடுவில் அனுமத் ஜெயந்தியன்று தங்கள் விரதத்தை முடிக்கின்றனர். இதற்கு அனுமன் தீக்ஷா என்று பெயர். பக்தர்களுக்கு அனுமன் சக்தி வாய்ந்த வரங்களை அருள்கிறார் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. கதையோடு அனுமன் சிலைகளை தெருக்களில் சாதாரணமாகக் காணமுடியும். அடிலாபாத் மாவட்டத்தைக் காப்பாற்றும் காவல் தெய்வமாக அனுமனை இப்பகுதி மக்கள் வணங்குகின்றனர்.