Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அடிலாபாத் அனுமன் பெங்களூர் கோயில்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
லிங்க வடிவில் விஷ்ணு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2016
02:02

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு அருகே உள்ளது சிம்மாசனம். இங்குள்ள வராக லக்ஷ்மி நரசிம்மர் கோயிலில் லிங்க வடிவில் விஷ்ணு காட்சியளிக்கிறார். வராக மூர்த்தியாகவும், நரசிம்ம மூர்த்தியாகவும் இணைந்த வடிவம் முழுவதும் சந்தனம் பூசப்பட்டு மேற்படி காட்சியளிக்கிறது. ஹிரண்யாகசிபுவை வதம் செய்து உக்ரத்துடன் காட்சியளிக்கும் நரசிம்மரை குளிர்விக்கவே இப்படிச் சந்தனம் பூசப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை அக்ஷய த்ருதியை அன்று சுவாமியின் நிஜரூப தரிசனம் பக்தர்களுக்கு பன்னிரண்டு மணிநேரம் கிடைக்கும் அப்போது மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து இவரை தரிசிப்பர். சந்தனோற்சவம் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் அப்போது புதிய சந்தனம் சாத்த பதினெட்டு மணி நேரம் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் வெள்ளிப்புத்தூரில் இருந்து கொண்டு வரப்படும் சந்தனம், சுவாமிக்கு சாத்தப்படுகிறது. ஆண்டில் மூன்று முறை சந்தனம் பூசப்படுகிறது. ஒவ்வொரு முறையும் 128 கிலோ சந்தனம் பூசப்படுகிறது. சிரவண பவுர்ணமியன்று சுவாமிக்கு ஆபரணங்களால் அலங்காரம் செய்வர். இதற்கு கரலா சந்தான சமர்ப்பணா என்று பெயர். பொதுவாக விஷ்ணு கோயில்களில் மூலவரின் பீடம் சுவரின் அருகில் காணப்படும். ஆனால் இங்கு சிவன் கோயில்களில் காணப்படுவது போல் மத்தியில் காணப்படுகிறது. அரியையும் சிவனையும் ஒன்றாகக் காணும்படியான இந்த அமைப்பு, சைவ வைணவ வேறுபாடுகளை அகற்றும்.

கொல்கத்தா காளிக்குப் பிடித்த ஆயுதம் வாள் இடது கையில் வெள்ளி வாளை ஏந்தியிருக்கிறாள். இந்த காளியிடம் வேண்டிக் கொண்டு, அவரவர் வசதிக்கு தகுந்தவாறு வெள்ளி, தங்க வாள் செய்து காணிக்கையாக கொடுப்பது வழக்கமாக உள்ளது. மேலும் இந்தக் காளிக்கு புடவை சாத்துவதும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. பக்தர்கள் இந் அன்னைக்கு சிவப்பு பூமாலையும், சிவப்பு புடவையும் சாத்துகிறார்கள். ஒரு சிவப்பு மாலை, ஒரு ரூபாய் நாணயம், இரண்டு ரூபாய்க்கு பால்பேடா இனிப்பு ஆகியவற்றுடன் பக்தர்கள் இந்தக் கோயிலுக்குள் நுழைகிறார்கள். காளியின் இடது கையில் ரூபாயை வைத்துப் பிரார்த்தனை செய்து, அன்னையை 3 முறை வலம் வருகின்றனர். பேடாவை பிரசாதமாக உட்கொள்கின்றனர். இங்கு நவராத்திரி திருவிழா மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. மேலும் தீபாவளி அன்று ஆடல் பாடல்களுடன் நடைபெறும் காளிபூஜையும் சிறப்புமிக்கது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar