பதிவு செய்த நாள்
16
ஆக
2011
10:08
புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில், அரவிந்தரின் 139வது பிறந்த நாள் விழா, நேற்று கொண்டாடப்பட்டது. அரவிந்தர், 1872, ஆக., 15ம் தேதி, கோல்கட்டாவில் பிறந்தார்; 1910ல் புதுச்சேரியில் ஆசிரமத்தை நிறுவினார். இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அரவிந்தரின், 139வது பிறந்த நாள் விழா, நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அரவிந்தர் தங்கிருந்த அறை, பார்வையாளர்கள் தரிசனத்திற்காக திறந்து விடப்பட்டது. அரவிந்தரின் சமாதி, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்கள் மலரஞ்சலி செலுத்தி வழிப்பட்டனர். மாலையில் இசை நிகழ்ச்சியும், தியானமும் நடந்தது.