கும்மிடிப்பூண்டி: பல ஆண்டுகளாக துார்வாராததால், கும்மிடிப்பூண்டி ஞானவேல் முருகன் கோவில் குளம் துார்ந்துள்ளது.கும்மிடிப்பூண்டி, ஞானவேல் முருகன் கோவில் குளம், இந்து சமய அறநிலையத் துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த குளத்தை, பல ஆண்டுகளாக துார்வாராததால், புதர் மண்டி காணப்படுகிறது. சமீபத்தில் பெய்த கன மழையின் போதும் குளம் நிரம்பவில்லை.குளத்தை சுற்றியும் சிறுநீர் கழித்து வருவதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.மேலும் குளத்தின் படித்துறையில் புதர்மண்டி, குப்பை சூழ்ந்து காணப்படுகிறது. சீரழிந்த கோவில் குளத்தை, இந்து சமய அறநிலைய துறையினர், சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.