ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவி என்ற மாரியம்மனின் உக்கிரம் அதிகமாக இருந்தது. அதனால், கோவில் நிர்வாகத்தினர் கண்ணனுõர் என்னுமிடத்தில் அந்த விக்ரஹத்தை வைத்து விட்டனர். வைஷ்ணவியை மாரியம்மனாக அப்பகுதி மக்கள் வழிபட்டனர். விஜயநகரப்படைகள் தென் பகுதியை முற்றுகையிட்டபோது போரில் வெற்றி பெற்றால் அவ்விடத்தில் அம்மனுக்கு ஆலயம் எழுப்புவதாக விஜயநகர மன்னர் வேண்டிக் கொண்டார். அதன் படியே தென்பகுதியை வெற்றி கொண்டார். பிரார்த்தனையை நிறைவேற்ற கோவிலையும் கட்டினார். கண்ணனுõரில் விஜயநகர மன்னர் கட்டிய கோவிலே சமயபுரம் மாரியம்மன் கோவிலானது. மாரி என்றால் மழை. மழை பெய்தால் நாடு செழிக்கும். அதுபோல் நம் வாழ்வு செழிக்க அருள்மழை பொழிபவர் சமயபுரம் மாரியம்மன். உலகமக்கள் நலம் பெற வேண்டி இந்த அம்பிகையே விரதம் இருப்பது குறிப்பிடத்தக்கது.