பதிவு செய்த நாள்
03
பிப்
2016
11:02
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம், 1,000 கோடி ரூபாயை தாண்டியது. திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் தினமும், இரண்டு கோடி ரூபாய் என வசூலாகி வருகிறது. ஏப் - மே மாதங்களில், சராசரியாக, 80 கோடி ரூபாய்; மற்ற மாதங்களில், 55 - 60 கோடி ரூபாய் கிடைக்கும். பிப்., - மார்ச் மாதங்களில், பல நிறுவனங்களின், நிதி ஆண்டு முடிவடைவதால், பெரிய அளவில் உண்டியல் வருவாய் கிடைக்கும். இதனால், ஆண்டிற்கு சுமார், 900 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வந்தது. இதன்படி, 2015 -16 தேவஸ்தான பட்ஜெட்டில், உண்டியல் வருமானம், 905 கோடி கிடைக்கும் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த மாதத்திற்குள், 1,010 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.