தடைகளை தாண்டிச் சென்று வராகி அம்மனை தரிசிக்கும் பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2016 12:02
கீழக்கரை: உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயில் அருகில் குவிக்கப் பட்டுள்ள மணல், ஜல்லி கற்களை தாண்டிச் சென்று அம்மனை தரிசிக்கவேண்டிய கட்டாயம் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது. உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலுக்கு மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்துசெல் கின்றனர். கோயிலின் வெளிப் பிரகாரம் மேடு, பள்ளமாகவும், கரடு, முரடாகவும் உள்ளதால் கோயிலுக்குள் சென்று அம்மனை தரிசிப்பதில் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதையடுத்து கோயிலை சுற்றி பேவர் பிளாக் கற்கள் பதிக்க திருப்புல்லாணி ஒன்றிய நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் துவக்குவதற்காக கோயில் அருகில் மணல், ஜல்லி கற்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. 6 மாதங்கள் கடந்தும் கட்டுமான பணிகள் துவக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கட்டுமானப் பொருட்களை தாண்டிச் சென்று அம்மனை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் அவதிபடுகின்றனர். மதுரை பக்தர் ஸ்ரீனிவாசன் கூறுகையில்,“ கோயில் வெளி பிரகாரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள மணல், ஜல்லி கற்களை தாண்டிச்சென்று அம்மனை தரிசிப்பது சிரமமாக உள்ளது. பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணிகளை விரைந்து முடிக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்றார்.