பண்ருட்டி காமாட்சியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04பிப் 2016 12:02
பண்ருட்டி: பண்ருட்டியில் காமாட்சியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பண்ருட்டி வ.உ.சி., தெருவில் உள்ள விஸ்வகர்மா சமூகத்தினருக்கு சொந்தமான காமாட்சியம்மன் கோவில் மற்றும் ராமசாமி தெருவில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 29ம் தேதி காலை 9:00 மணிக்கு மேல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் பூஜை துவங்கியது.
கடந்த 1ம் தேதி மாலை 4:00 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், முதல் கால யாகசாலை பூஜையும், 2ம் தேதி காலை 7:00 மணிக்கு மேல் 2ம் கால மற்றும் 3ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று 3ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு மேல் 4ம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாகுதி, தீபாராதனையும் 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 9:20 மணிக்கு வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. காமாட்சி அம்மன், பரிவாரசாமி கடம் புறப்பாடாகி காலை 10:00 மணிக்கு மகா துாபி கும்பாபிஷேகம், காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இரவு சந்தனக்காப்பு நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.