பதிவு செய்த நாள்
04
பிப்
2016
12:02
வடலுார்: குறிஞ்சிப்பாடி அடுத்த ஆ.பிள்ளைப்பாளையத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 2ம் தேதி காலை 8:00 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், 11:00 மணிக்கு சுவாமி சிலைகள் கரிக்கோலம், மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம், கடஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 9:15 மணிக்கு யாத்ராதானம் முடிந்து யாக சாலையில் இருந்து கலசம் புறப்பாடு நடந்து, 10:15 மணிக்கு மூலவர் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர், அம்பாள், முருகன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.