பதிவு செய்த நாள்
04
பிப்
2016
01:02
உடுமலை: உடுமலை ரத்தினலிங்கேஸ்வரர் கோவில், கும்பாபிஷேக இரண்டாமாண்டு துவக்க விழா நடந்தது.
உடுமலை, தில்லை நகரில் அமைந்துள்ளது, ரத்தினாம்பிகை உடனமர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவில்.இக்கோவிலில், விநாயகர், முருகன் மற்றும் பைரவருக்கு தனி சன்னதிகள் அமைக்கப்பட்டு, கடந்தாண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது; இரண்டாமாண்டு துவக்க விழா, நேற்றுமுன்தினம் நடந்தது.காலை, 5:00 மணிக்கு, கணபதி ேஹாமமும், 8:00 முதல், 9:00 மணி வரை, ரத்தினலிங்கேஸ்வரர், ரத்தினாம்பிகையம்மை, விநாயகர், முருகன் மற்றும் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜையும் நடந்தது. காலை, 10:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.