கோபிசெட்டிபாளையம்: கோபி கோரக்காட்டூர் அருட்கரிய காளியம்மன் கோவிலில் இன்று குண்டம் திருவிழா நடக்கிறது. கோபி வெள்ளாங்கோயில் அருகே கோரக்காட்டூர் அருட்கரிய காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா கடந்த ஜன., 20ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இன்று அதிகாலை 4 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அக்னி அபி?ஷகம் நடக்கிறது. பிப்., 5ல் காலை 9.30 மணிக்கு அம்மன் தேர் ரதம் ஏறுதல், மாலை 5 மணிக்கு ரத உற்சவம் நடக்கிறது. பிப்.,6ல் முத்துப்பல்லக்கு, கரகாட்டம் நடக்கிறது. 7ம் தேதி மஞ்சள் நீராட்டு நடக்கிறது.