பொள்ளாச்சி: பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில், லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம், வரும் 7ம் தேதி நடக்கிறது.
பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் வரும் 7ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி, காலை, 7:00 மணிக்கு ஹயக்ரீவர் ஹோ மம், அலங்காரம், நைவேத்தியம், தீர்த்த பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
குழந்தைகளின் கல்வி ஞானம் சிறந்து விளங்கவும், தேர்வில் முதன்மை பெறவும், வாழ்வில் வெற்றி பெறவும் இந்த சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.