பதிவு செய்த நாள்
04
பிப்
2016
02:02
தஞ்சாவூர்: மகாமகத்தை முன்னிட்டு கும்பகோணத்தில், 6 தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு வருகிறது.மகாமகத் திருவிழா, வரும், 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி, 22ம் தேதி நடைபெறுகிறது. குளத்தில் நீராட வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் என்பதால், சென்னை மற்றும் மாநிலத்தின் பிற முக்கிய ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் ஆயிரக்கணக்கில் இயக்கப்பட உள்ளன. இதனால், கும்பகோணத்தை சுற்றி, 6 தற்காலிக பஸ் ஸ்டாண்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கொரநாட்டு கருப்பூரில் அமையவுள்ள பஸ் ஸ்டாண்ட் திருவையாறு, நீலத்தநல்லுார் மற்றும் தஞ்சாவூர் மார்க்கத்திலிருந்து வரும் பஸ்கள் நிற்கும் தாராசுரம் புறவழிச்சாலை, பொன்னையா ராமஜெயம் கல்லுாரி மைதானம் தஞ்சாவூர் மார்க்கம் வழியாகச் செல்லும் பக்தர்கள் ஏறும் இடமாகும். இங்கிருந்து தஞ்சாவூர், திருச்சி, கோவை, ஈரோடு, பழநி, மதுரை, போன்ற ஊர்களுக்கு செல்ல, 1,361 சிறப்புப் பஸ்கள் விடப்படுகிறது.
உள்ளூர் பஸ் ஸ்டாண்ட் சென்னை மார்க்கத்திலிருந்து வரும் பக்தர்கள் இறங்கும் இடமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது அசூர் தாற்காலிக பஸ் ஸ்டாண்ட் சென்னை வழியாகச் செல்லும் பக்தர்கள் ஏறும் இடமாகும். இங்கிருந்து வடலுார், திருவண்ணாமலை, சென்னை போன்ற ஊர்களுக்குச் செல்ல, 809 சிறப்புப் பஸ்கள் விடப்படுகின்றன.
செட்டிமண்டபம் பஸ் ஸ்டாண்ட் மயிலாடுதுறை, காரைக்கால் மார்க்கத்திலிருந்து வரும் பக்தர்களுக்காக, 337 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த நிலையங்களிலிருந்து கும்பகோணத்தைச் சுற்றியுள்ள, திருநாகேஸ்வரம், ஒப்பிலியப்பன் கோவில், சுவாமிமலை, பட்டீஸ்வரம் மற்றும் நவக்கிரக ஸ்தலங்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளில், டிக்கெட் முன்பதிவு, ஆன்லைன் மூலம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.