பதிவு செய்த நாள்
06
பிப்
2016 
12:02
 
 பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகேயுள்ள சமத்துார் கரியாஞ்செட்டிபாளையம் பிரிவில் உள்ள கிருஷ்ணபிரேமை மடத்தின் மூன்றாம் ஆண்டு விழா நடந்தது. விழாவையொட்டி, சுதர்சன யாகம், கிருஷ்ண பிரேமை மடத்தின் தலைவர் கிருஷ்ண பிரேமை சவுந்தரராஜா சுவாமிகள் தலைமையில் நடந்தது. 108 கலச பூஜை, சதுர்வேத பாராயணம், கற்பக விருட்சம் கிருஷ்ணருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. துாத்துக்குடி வேதாகம பாடசாலை முதல்வர் சிவஸ்ரீ சுப்ரமணிய கனபாடிகள் யாகத்தினை நடத்தினர். மதுரை கண்ணன் சங்கல்பம் செய்து வைத்தார். தொழிலதிபர் தாத்துார் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார். மதியம், 12:30 மணிக்கு பூரணாகுதியும், பின், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தன. இதனைத்தொடர்ந்து, ஆனைமலை ஆர்ஷா வித்யா பீடத்தின் தலைவர் ததேவானந்தா சரஸ்வதி சுவாமிகள், பகவத் கீதை சொற்பொழிவும், மன்னார் குடி பாலகிருஷ்ணானந்த சுவாமிகளின் பக்தி இன்னிசையும் நடைபெற்றது. கோவை ராமகிருஷ்ணா மிஷன் கல்லுாரி பேராசிரியர் விஸ்வநாதன், சித்த மருத்துவர் விவேகானந்தன், லட்சுமி வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைவர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் யாகத்தில் பங்கேற்றனர்.