பதிவு செய்த நாள்
08
பிப்
2016
01:02
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் வனபோஜன உற்சவத்தை முன்னிட்டு, இன்று களக்காட்டூர் கிராமம் செல்கிறார். காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள், வனபோஜன உற்சவத்தன்று, ஆண்டுதோறும் காஞ்சிபுரம் அடுத்த, களக்காட்டூர் கிராமத்திற்கு சென்று வருவார். அதன்படி, இன்று அதிகாலை 4:30 மணியளவில், பெருமாள் கோவிலில் இருந்து புறப்படுகிறார். வழியில், சின்ன ஐயன்குளம், ஓரிக்கையில் மண்டகப்படி முடிந்தபின், காலை 8:30 மணியளவில், களக்காட்டூர் கிராமம் செல்கிறார். அங்கு உள்ள முக்கிய தெருக்களில் பெருமாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதை தொடர்ந்து, அங்குள்ள மரகதவல்லி தாயார் சமேத கரியமாணிக்க வரதர் கோவிலில், மதியம் 12:30 மணியளவில், எழுந்தருளுவார். அங்கு மண்டகப்படி முடிந்த பின், மதியம் 1:30 மணியளவில், பாலாற்றுக்கு புறப்பட்டு செல்வார். அங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். பின், மாலை 4:30 மணியளவில், ஆற்றில் இருந்து புறப்பட்டு தேசிகன் சன்னிதியில் எழுந்தருளுவார். அங்கு ஆராதனை முடிந்த பின், புறப்பட்டு, இரவு 7;30 மணியளவில், மீண்டும் பெருமாள் கோவிலை சென்றடைவார்.