ஹரித்வார்: புனித நதிகளான கங்கை, ஜீப்ரா, கோதாவரி பாயும் அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜைனி, நாசிக் ஆகிய இடங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூரண கும்பமேளா நடைபெறும். இதில், உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரிலும், உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்திலும் ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அர்த்த கும்பமேளா நடைபெறும். இதன்படி, ஹரித்வாரில் இன்று(08-02-16) அர்த்த கும்பமேளா நடைபெறுகிறது. இதையொட்டி, கங்கை நதியில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.