கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஆதிசைவர்கள் நலவாழ்வு மைய நிறுவனர் கார்த்திகேயசிவம் எழுதிய ஆதிசைவர்கள் வரலாற்று நூல் வெளியீட்டு விழா நடந்தது. விழாவிற்கு பிள்ளையார்பட்டி சிவநெறிக்கழக நிறுவனர் பிச்சைகுருக்கள் தலைமை தாங்கினார். திருவாடுதுறை ஆதினம் தம்பிரான் சுவாமிகள் முன்னிலை வகித்தார். ரவி வரவேற்றார். சென்னை ஐகோர்ட் நீதிபதி மகாதேவன் ஆதிசைவர்கள் வரலாறு <நூலினை வெளியிட்டார். மவுன மடம் தருமை ஆதீனம் மவுனகுமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள், மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவாகம பாடசாலை நிறுவனர் சுவாமிநாத சிவாச்சாரியார் வாழ்த்துரை வழங்கினர். இதில் ருத்ரமூர்த்தி, குருமூர்த்தி, வேதாசலசங்கர், அர்த்தநாரி, சாம்பசிவம், சுந்தரமுருகன், விருததாசலம் விக்னராஜசிவம், ஆதித்ய சிவம் உட்பட பலர் பங்கேற்றனர். ஆதிசைவர்கள் நலவாழ்வு மைய நிறுவனர் கார்த்திகேயேசிவம் நன்றி கூறினார்.