பார்த்தசாரதி கோவில் தேரோட்டம்:கோவிந்தா கோஷத்துடன் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2016 01:02
திருவல்லிக்கேணி: பார்த்தசாரதி கோவிலில், பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, நேற்று நடந்த தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர். பார்த்தசாரதி கோவிலில், பிரம்மோற்சவத் திருவிழா, கடந்த 31ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிறப்பாக, நேற்று காலை, 7:௦௦ மணிக்கு, திருத்தேரை ஏராளமான பக்தர்கள், ’கோவிந்தா... கோவிந்தா’ என, பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பி வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் முக்கிய மாடவீதிகள் வழியாக சென்று, காலை, 8:10 மணி அளவில் நிலை வந்தடைந்தது.