Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அறநிலையத்துறையின் கீழ்வரும் ... சவுடேஸ்வரி அம்மன் கோவில் தொட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளாத்தீஸ்வரர் கோயில் தேரோட்ட திருவிழா: கொடியேற்றத்துடன் நாளை துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2016
12:02

உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் மாசி மக தேரோட்ட திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் தென்காளஹஸ்தி என்ற பெயர் பெற்றது. பழமையான, பிரசித்திபெற்ற, ராகுகேது தோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் விளங்கு கிறது. இங்குள்ள தனி சன்னதியில் ராகுவும் கேதுவும் தம்பதி சகிதமாய் எழுந்தருளி யுள்ளனர். கால சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலம் என்ற பெயர் பெற்றது. தெற்கில் இருந்து வடக்கு நோக்கி ஆறு ஓடுவதும், அதன் கரையில் கோயில் கிழக்கு பார்த்து அமைந்திருப்பதும் காசிக்கு அடுத்து இங்கு மட்டுமே என்றும் கூறுகின்றனர். இந்த கோயில் தேரோட்டம் கடந்த 80 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்து, இவ்வூர் பெரியவர்களின் முயற்சியால், கடந்த சில ஆண்டுகளாக நடந்துவருகிறது. இந்தாண்டு மாசிமக தேரோட்டம் பிப். 23 ல் நடைபெறுகிறது. அதற்கான கொடியேற்றம் நாளை(பிப்.10) காலை 9 மணிமுதல் 10.30 மணிக்குள் நடைபெறு கிறது. முன்னதாக காலை 7.30 முதல் 9 மணிக்குள் அனுமந்தன்பட்டி உத்தமநாச்சி யம்மன் கோயில், உத்தமபாளையம் பிடாரியம்மன் கோயில்களில் காப்பு கட்டுதல் நடைபெறும். தொடர்ந்து தினமும் ஒவ்வொரு சமூகத்தினரின் மண்டகப் படி நடைபெறும். காளாத்தீஸ்வர், அம்மனும் வீதிஉலா வருவர். பிப்.21ல் திருக்கல் யாணம், பிப். 23 ல் நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறும், என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar