கம்பராமாயணம் எழுதிய கவி கம்பர் சரஸ்வதி பக்தர். தன் கடைசி காலம் நெருங்கி விட்டதைத் தெரிந்து கொண்ட கம்பர். தான் வணங்கி வந்த ஒரு சரஸ்வதி விக்ரகத்தைச் சேர மன்னர் ஒருவரிடம் ஒப்படைத்த பிறகு இறந்தார். இறப்பதற்கு முன் அவர், நவராத்திரி ஒன்பது நாளும் அந்தச் சிலைக்கு பூஜை செய்ய வேண்டும்! என்று மன்னரிடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டார். இன்றைக்கும் அந்த சரஸ்வதி சிலை நவராத்திரி ஒன்பது நாளும் ஒரு யானை மூலம் திருவனந்தபுரம் பத்மநாத சுவாமி கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு ஆராதனை செய்யப்படுகிறது.