விஜயதசமி அன்று நாட்டின் பல பகுதிகளில் ராம்லீலா என்ற பெயரில் ராவணனின் பொம்மைகளை தீ வைத்து எரிக்கும் வழக்கம் உள்ளது. ஆனால் மத்தியப் பிரதேசத்தில் கோன்புரா எனும் கிராமத்தில் உள்ள மக்கள் விஜயதசமி அன்று அந்த ஊரின் மத்தியில் அமைந்துள்ள மிகப் பெரிய ராவணன் சிலைக்கு விசேஷ பூஜைகள் நடத்தி வழிபடுகின்றனர்.