கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தூய அன்னை பாத்திமா தேவாலயத்தில், சாம்பல் புதன் விபூதி திருநாள் நேற்று துவங்கியது. கிருஷ்ணகிரி மையப்பகுதியில் அமைந்துள்ள தூய அன்னை பாத்திமா தேவாலயத்தில், 40 நாட்கள் தவக்கால திருப்பலி பூஜை நேற்று காலை துவங்கியது. தவக்காலத்தின், முதல் நாளான நேற்று, நெற்றியில் விபூதி பூசும் திருநாள், தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் நடந்தது. தொடர்ந்து ஆலயத்தில் ஆராதனை நடந்தது. இதில், கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரபகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.