சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள சொர்ணாம்பிகை அம்மனுக்கு, தை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று மாலை, 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம், அலங்காரம் செய்யப்படுகிறது. 1,000 தாமரை மலர்களை கொண்டு ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யப்படுகிறது. மேலும், 16 வகை வேத மந்திரங்கள் மற்றும் சிவ வாத்தியங்கள் ஒலிக்க சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. முடிவில் பூஜை செய்த தாமரை மலர்களை பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. பக்தர்கள் தங்கள் வாகனங்களை நந்தவனம் வழியாக சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கட்டளைதாரர்கள் செய்துள்ளனர்.