திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் திருப்பணியை முன்னிட்டு பாலாலயம் நடந்தது.
பிள்ளையார்பட்டி கோயிலுக்கு கடந்த 2004ல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது 12 ஆண்டுகளுக்குப் பின்மீண்டும் திருப்பணி நடைபெற உள்ளது.அதை முன்னிட்டு நேற்று பாலாலயம் நடந்தது. நேற்று முன்தினம் காலை அனுக்ஞை பூஜை, மாலை வாஸ்து சாந்தி நடந்தது. நேற்று காலை 11 மணிக்கு ராஜகோபுரமுன் மண்டபத்தில் பாலாலய பூஜைகளை சோமசுந்தரகுருக்கள் நடத்தினார்.தொடர்ந்து கலசங்களுடன் சிவாச்சாரியார்கள், அறங்காவலர்கள் வி.ராமனாதன் செட்டியார், எம்.தண்ணீர்மலை செட்டியார் ஆகியோர் கோயில் மேல்தளத்தில் கொடி மரத்தின் அருகே பாலாலயத்தை நிறைவு செய்தனர்.