பதிவு செய்த நாள்
12
பிப்
2016
12:02
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன், அங்காளம்மன் கோவிலின் தேர் திருவிழா, நோன்பு
சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
நேற்றுமுன்தினம் இரவு, 9:30 மணிக்கு, சிறப்பு பூஜை நடத்தி, நோன்பு சாட்டப்பட்டது. வரும், 15ம் தேதி, கரியகாளியம்மன் அணி எடுப்பு, 16ம் தேதி கம்பம் நடுதல், 17ம் தேதி, ஸ்ரீ கரியகாளியம்மன் பண்டிகை, 19ம் தேதி, கடைசி நாள் அபிேஷகம், 23ம் தேதி பூவோடு வைத்தல், 26ம் தேதி கிராம சாந்தி, 27ம் தேதி, கொடி கட்டுதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
மார்ச் 1ம் தேதி, அபிேஷகம், 2ம் தேதி, மாவிளக்கு பூஜை, 4ம் தேதி, தேரோட்டம் கடைசி நாள்
நிகழ்ச்சி, 5ம் தேதி, மஞ்சள் நீராடுதல், 7ம் தேதி, மகா அபிேஷகம் நடக்கின்றன. பக்தர்கள்
திரளாக பங்கேற்க வேண்டும் என, கோவில் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.