சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த குச்சிக்காடு மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. விழாவையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின்னர் நடந்த தேரோட்டத்தின்போது வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இரவு விருத்தாச்சலம் ராஜா குழுவினரின் பாட்டுக் கச்சேரி நடந்தது. முன்னதாக கல்லேரி குப்பம் கணேசன் குழுவிணரின் பாரத பிரசங்கம் நடந்தது. மூரார்பாளையம் அரிமா சங்க தலைவர் மணிகண்டன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் பச்சமுத்து, நாட்டாண்மை மண்ணாங்கட்டி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.