பதிவு செய்த நாள்
17
பிப்
2016
11:02
அவிநாசி: மாசி மகத்தேர்த்திருவிழா, திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.கொடிமரத்தின் முன், சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை நடத்தப்பட்டு, அதன்பின், கொடித்துணிக்கும் பூஜைகள் நடந்தன. கொடித்துணி, பிரகார உலாவாக கொண்டு செல்லப்பட்டு, ரோஹிணி நட்சத்திரத்தில் கொடியேற்றப்பட்டு, சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
வரும், 22ல் சுவாமி ரதத்துக்கு எழுந்தருளல்; மாலை, 3:00 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். வரும், 27ல், மஞ்சள் நீர் விழா, மயில்வாகன காட்சி நடக்கிறது. தினமும் இரவு, 7:00 மணிக்கு கலை நிகழ்ச்சி நடைபெறும்.