தேவராடிபாளையம் மகாலட்சுமி அம்மன் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2016 11:02
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அடுத்துள்ள தேவராடிபாளையத்தில், மகாலட்சுமி அம்மன் கோவிலில் ஒன்பதாவது ஆண்டு விழா நேற்று முதல் துவங்கியுள்ளது. இக்கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. கோவில் கும்பாபிஷேகத்திற்கு பின் ஒவ்வொரு ஆண்டும், ஆண்டு விழா நடத்துவது வழக்கம்.
அதன்படி, நேற்று ஒன்பதாவது ஆண்டு விழா துவங்கியது. அதில், ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை, பொதுமக்கள் அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்து வழிபட்டனர். இன்று, (17ம் தேதி) காலை, 6:00 மணிக்கு யாகசாலை மற்றும் வேள்வி பூஜை நடக்கிறது. பின், 7:00 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வருகின்றனர். பிற்பகல், 1:00 மணியளவில் அம்மனுக்கு திருக்கல்யாணமும், மாலை, 6:00 மணிக்கு அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலாவும் இடம்பெறுகின்றன. இதனை தொடர்ந்து ஆண்டு விழா நிறைவு பெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.