பதிவு செய்த நாள்
17
பிப்
2016
11:02
உத்திரமேரூர்: திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம்
இரவு, ரத சப்தமி உற்சவம் கோலாகலமாக நடந்தது.
திருமுக்கூடலில், பாலாற்றங் கரையோரம், தொல்லியல் துறைக்கு சொந்தமான, அப்பன்
வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. அந்த கோவிலில், ஆண்டுதோறும் தை அல்லது மாசி மாதத்தில், ரத சப்தமி உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டிற்கான, 101ம் ஆண்டு ரத சப்தமி விழா, நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவையொட்டி, நேற்று முன்தினம், காலை 5:30 மணிக்கு, சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. காலை 6:00 மணிக்கு, கோபுர வாசல் தரிசனம் அளித்த, அப்பன் வெங்கடேச பெருமாள், சூரிய பிரபையில் வீதியுலா வந்தார். மதியம் 1:00 மணிக்கு, அன்னதானமும், மாலை 4:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை, பல்வேறு குழுவினரால் சிறப்பு மங்கல இசை நிகழ்ச்சியும் நடந்தன. இரவு 9:00 மணிக்கு, சந்திர பிரபையில், சுவாமி வீதியுலா புறப்பாடு நடந்தது. இவ்விழாவில், அப்பகுதியை சுற்றியுள்ள பக்தர்கள் கலந்து கொண்டு, தீபம் ஏற்றி வழிபட்டனர்.