ராமநாதசுவாமி கோயிலில் சிவராத்திரி விழா பிப். 28ல் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2016 11:02
ராமேஸ்வரம்: சிவராத்திரி விழாவையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பிப். 28ல் கொடி ஏற்றபட்டு விழா துவங்குகிறது.
ராமேஸ்வரம் கோயிலில் பிப். 28ல் சுவாமி சன்னதி முன்புள்ள கொடி கம்பத்தில், மாசி சிவராத்திரி திருவிழா கொடி ஏற்றப்படுகிறது. மார்ச் 1 அதிகாலை 3.30 மணிக்கு ஸ்படிகலிங்க பூஜை மற்றும் காலை பூஜை நடக்கிறது. காலை 6.30 மணிக்கு ராமநாதசுவாமி வெள்ளி பூதவாகனம், பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி கிளிவாகனத்தில், பஞ்சமூர்த்திகளுடன் கெந்தமாதன மண்டகபடிக்கு புறப்பாடாகின்றனர். மாலை 6 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை முடிந்ததும் மீண்டும் கோயிலுக்கு புறப்பாடாகின்றனர். மார்ச் 7ல் மகா சிவராத்திரியையொட்டி இரவு வெள்ளி ரதம் புறப்பாடு, மாசி அமாவாசையான மார்ச் 8ல், சுவாமி, அம்மன் அக்னி தீர்த்த கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி நடக்கிறது. 12 நாட்கள் தொடர்ந்து நடக்கும் விழாவில் சுவாமி, அம்மன் தங்க, வெள்ளி வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடக்கும் என, கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்தார்.