கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பது முன்னோர் வாக்கு. ஊரில் வேறு கோயில் இல்லாவிட்டாலும், குளக்கரை, ஆற்றங்கரை, ஊர்ச்சாவடி, முச்சந்தி எனவிநாயகர் கோயில் இருக்கும். சிவன், அம்பிகை போன்ற தெய்வங்கள் கருவறையில் இருந்தாலும், முதற்கடவுள் என்னும் அடிப்படையில் பரிவார தெய்வமாக இடம் பெற்றிருப்பவர் இவரே. பெரும்பாலும் விநாயகரை கன்னிமூலை என்னும் தென்மேற்கு திசையில் வைப்பது வழக்கம். அதனால் தெற்கு திசைக்கு விநாயகர் திசை என்ற பெயருண்டு. வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல் நமக்காக எந்த இடத்திலும் குடியிருக்கும் இவரை மந்திரப் பிரதிஷ்டை இல்லாமலே, வழிபடலாம் என்று ஆகமசாஸ்திரம் கூறுகிறது. வீட்டுவழிபாட்டில் சாணத்திலோ, சந்தனத்திலோ பிள்ளையாரை பிடித்து வைத்து பூஜிப்பர்.பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று சுலவடை இதன் அடிப்படையில் தான் வந்தது.