மகாமகத்திற்கு முந்தைய ஆண்டில் திருமணம் முதலானவற்றை அக்காலத்தில் செய்வதில்லை. ஏனெனில் கும்பகோணம் சென்று நீராடுவதையே முதல் குறிக்கோளாகக் கொண்டனர். இதற்காக வெகு துõரத்தில் இருந்து நடந்தும், வண்டிகளிலும் வந்தனர். பந்தங்களை வேரறுக்க வேண்டும் என்பதே மகாமக நீராட்டத்தின் நோக்கம். பந்தங்கள் அறுந்து போனால் பாவங்கள் தானாகவே தொலையும். ஆனால் காலம் மாறி விட்ட நிலையில் மகாமகம் வருவதே யாருக்கும் தெரியாமல் போனதால், இந்த விதிமுறையும் வழக்கத்தில் இருந்து தொலைந்து விட்டது.