பதிவு செய்த நாள்
17
பிப்
2016
12:02
வாசகர்களே! பிப்.22ல் மகாமகத் திருவிழா கும்பகோணத்தில் நடக்கிறது. இதையொட்டி, இங்குள்ள முக்கிய கோவில்களுக்கு சென்று வாருங்கள். மகாமகத்தன்று, இந்தக் கோவில்களில் உள்ள சிவன் மகாமக குளத்திற்கும், பெருமாள் காவிரிக்கும் எழுந்தருள்வர்
1. கும்பேஸ்வரர்- உலகம் அழிந்த காலத்தில், பிரம்மா தன் படைப்புக் கலன்களைக் காப்பாற்ற, அமிர்தம் நிரம்பிய ஒரு கும்பத்தில் வைத்து மிதக்க விட்டார். அந்தக் கும்பம் தங்கிய இடம் இது. அம்மன் மங்களாம்பிகை. காலை 6.00 - 12.30 மாலை 4.00 - 9.00 பஸ் ஸ்டாண்ட் அருகில். 0435- 242 0276.
2. பாணபுரீஸ்வரர் - உலகம் அழிந்த காலத்தில், தண்ணீரில் மிதந்த கும்பத்தை சிவன் பாணத்தால் உடைத்த தலம். அம்மன் சோமகலாம்பாள். காலை 7.00 - 11.30 மாலை 5.00 - 8.00 கும்பகோணம் நகர எல்லையிலுள்ள பாணாத்துறை.
3. கோடீஸ்வரர்- கோடி லிங்கங்களை தரிசித்த பலன். பாவம் நீங்கும். அம்மன் பந்தாடு நாயகி. காலை 7.00 - 12.00 மாலை 5.00 - 8.00 கும்பகோணம்-சுவாமிமலை ரோட்டில் 4 கி.மீ.,
4. ஆதிகம்பட்ட விஸ்வநாதர்- நகை வியாபாரிகள், ஆசிரியர், மாணவர்கள் பிரார்த்தனை தலம். அம்பாள் ஆனந்தநிதி. காலை 7.00 - 12.00 மாலை 5.00 - 8.00 கம்பட்ட விஸ்வநாதர் கீழவீதி.
5. காமாட்சி ஏகாம்பரேஸ்வரர்- மகாமக குளத்திற்கு இந்தக் கோயிலிலிருந்து மட்டுமே, சிவனுக்கு பதிலாக, காமாட்சி எழுந்தருள்வாள். காலை 6.00 -12.00 மாலை 4.30 - 8.00 கும்பகோணம் - நாகேஸ்வரம் கீழ வீதி.
6. கவுதமேஸ்வரர்- சிவனால் உடைக்கப்பட்ட கும்பத்தில் சுற்றப்பட்ட நுõல் லிங்கமாக மாறிய தலம், விருச்சிக ராசி கோவில், பசுதானம் செய்யலாம். காலை 6.00 -12.00 மாலை 4.30 - 8.00 மகாமக குளத்தின் தெற்கு கரை.
7. அமிர்தகடேஸ்வரர்- ஒற்றைக் காலில் தவமிருக்கும் தவசு அம்பாள், சிவன் உடைத்த குடத்தில் இருந்த அமிர்தம் தங்கிய இடம். அம்பாள் அமிர்தவல்லி நாயகி. காலை 6.00 -12.00 மாலை 4.30 - 8.00 கும்பகோணம்- வலங்கைமான் ரோட்டில் 9 கி.மீ., 98653 06840.
8. அபிமுகேஸ்வரர்- மூன்று முக பிரம்மா சன்னிதி, அமிர்த கலசத்தை சிவன் உடைத்தபோது, அதிலிருந்த தேங்காய் விழுந்து, லிங்கமான தலம், அம்பாள் அமிர்தவல்லி. காலை 6.00 - 12.00 மாலை 4.30 - 8.00 மகாமக குளத்தின் கீழக்கரை.
9. நாகேஸ்வரர்- தேர் வடிவ கோவில். பிரளய கால ருத்திரர் சன்னிதியில் ஞாயிறன்று ராகுகாலத்தில் பூஜை, ராகுதோஷ நிவர்த்தி தலம். காலை 6.00 - 12.00 மாலை 4.30 - 8.00 கும்பேஸ்வரர் கோவிலின் கிழக்கே. 0435-243 0386.
10. காசி விஸ்வநாதர்- கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவிரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு நதி தேவதைகளுக்கு சன்னிதி, வயது அதிகமாகியும் ருதுவாகாத பெண்களின் பிரார்த்தனை தலம். காலை 6.00 -12.00 மாலை 4.30 - 8.00 மகாமக குளத்தின் வடக்கு கரை. 0435- 240 0658.
11. சோமேஸ்வரர்- கும்பத்திற்கு ஆதாரமாக இருந்த உரி லிங்கமான தலம், முருகனின் வலது பாதத்தில் பாதரட்சை, அம்மன் சோமசுந்தரி. காலை 6.00 - 12.00 மாலை 4.30 - 8.00 கும்பேஸ்வரர் கோவில்
பொற்றாமரை குளக்கரை. 0435-243 0349.
12. காளஹஸ்தீஸ்வரர்- கார்த்தியாயினியுடன் கல்யாண சுந்தரேஸ்வரர் மாப்பிள்ளை கோலம், 18 கை கொண்ட அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்க்கை சன்னிதி. காலை 6.00 - 12.00 மாலை 4.30 - 8.00 மடத்து தெரு.
13. சாரங்கபாணி- தேர் வடிவக்கோவில், கோமளவல்லி தாயார், மாசிமகத்தன்று தெப்பம். காலை 6.30 -12.00 மாலை 4.30 - 9.00 பழைய பஸ்ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ., 0435-243 0349.
14. சக்ரபாணி- சுதர்சனஹோமம் செய்ய சிறந்த தலம், சுதர்சனவல்லி தாயாருடன் சக்கரராஜன் சன்னிதி, மகாமக புண்ணிய பலனை சக்ரபாணிக்கு அர்ப்பணிப்பது மரபு. காலை 6.30 - 12.00மாலை 4.30-9.00 கும்பகோணம்-சுவாமிமலை ரோட்டில் 2 கி.மீ., 0435-240 3284.
15. ஆதிவராகப் பெருமாள்- சிறிய கோவில், சுவாமி மடியில் லட்சுமி தாயார். காலை 7.00 - 12.00 மாலை 4.30 - 8.00 சக்ரபாணி கோவில் அருகில்.
16. ராஜகோபால சுவாமி- செங்கமலத்தாயார், பசு பின்னால் நிற்க கையில் கோலுடன் சுவாமி, சப்தநதிகளுக்கும் அருள்பாலித்தவர். காலை 7.00 - 12.00 மாலை 4.30 - 8.00 பெரிய பஜார் தெரு.
17. ராமசுவாமி- தென்னக அயோத்தி, மூன்று சகோதரர்கள், சீதையுடன் ராமர், வீணை இசைக்கும் அனுமன் சிலை, (மகாமகத்தன்று மட்டும் காவிரிக்கு எழுந்தருளல்) காலை 7.00 - 12.00 மாலை 4.30 - 8.00 பெரியகடைவீதியின் தென்கோடி.
மகாமகக்குளக்கரையில் பிரம்மதீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தனேஸ்வரர், விருஷபேஸ்வரர், பாணேஸ்வரர், கோணேஸ்வரர், பக்திஹேஸ்வரர், பைரவேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், வியாகேஸ்வரர்,உமைபாகேஸ்வரர், நைருத்தீஸ்வரர், பிரம்மேஸ்வரர், கங்காநரேஸ்வரர், முத்த தீர்த்தேஸ்வரர், க்ஷேத்ரபாலேஸ்வரர்ஆகிய 16 லிங்கங்கள்உள்ளன.