ராமநாதபுரம்: கும்பகோண மகாமக தீர்த்தம், பிரசாதங்களை பதிவு தபாலில் பக்தர்களுக்கு அனுப்ப தபால்துறை சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. ராமநாதபுரம் தபால் கோட்ட கண்காணிப்பாளர் உதயசிங் கூறியதாவது: கும்பகோணம் மகாமக விழா பிப்., 22 ல் நடக்கிறது. இதையொட்டி தபால்துறை, அறநிலையத்துறை இணைந்து மகாமக பிரசாதங்கள், தீர்த்தம் ஆகியவற்றை பதிவு தபால் மூலம் பக்தர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளன. அதில் மகாமக தீர்த்தம், கும்பகோணத்தை சுற்றியுள்ள 17 கோயில்களின் மகாமக பிரசாதங்கள் அனுப்பப்படும். இதனை பெற ராமநாதபுரம் மாவட்ட தபால் அலுவலகங்களில் பிப்., 29 வரை ரூ.150 செலுத்தி முன்பதிவு செய்யலாம். பதிவு செய்த பக்தர்களின் முகவரிக்கு பிப்., 23 முதல் பதிவஞ்சல் மூலம் பிரசாதம், தீர்த்தம் அனுப்பி வைக்கப்படும், என்றார்.