பதிவு செய்த நாள்
19
பிப்
2016
12:02
ஆர்.கே.பேட்டை: சீதா லட்சுமணர் உடனுறை கோதண்டராம சுவாமி கோவிலில், இன்று, கும்பாபிஷேகமும், அதை தொடர்ந்து திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.ஆர்.கே.பேட்டை அடுத்த, சகஸ்ரபத்மாபுரம் கிராமத்தில், சீதா, லட்சுமணர் உடனுறை கோதண்டராம சுவாமி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம், இன்று, காலை 6:00 மணிக்கு நடைபெறுகிறது.இதற்கான யாகசாலை பூஜை, நேற்று முன்தினம் மாலை துவங்கியது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு கோபூஜையும், அதை தொடர்ந்து கலச புறப்பாடும் செய்யப்படுகிறது. 6:00 மணிக்கு, மூலவர் மற்றும் கோவில் கோபுரத்திற்கு, புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறும். காலை 9:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு, வீதியுலா நடைபெறுகிறது.