சென்னிமலை: சென்னிமலை அருகே, மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
சென்னிமலை அருகே, நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ளது கொடுமணல் கிராமம். இங்குள்ள பழமையான மாரியம்மன் கோவில், செல்வ விநாயகர் கோவில் பல லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டது. இதற்கான கும்பாபிஷேக விழா கடந்த, 17ம் தேதி துவங்கியது. கும்பாபிஷேகம் நடந்தது. அதிகாலை, 4.30 மணிக்கு யாக பூஜையுடன் விழா தொடங்கியது. காலை, 7 மணிக்கு மேல், சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். இதேபோல் முருங்கத்தொழுவு மாரியம்மனுக்கு மருந்து சாத்துதல், சிறப்பு யாக வேள்வி பூஜை, அபிஷேகம் நடந்தது. கிராம மக்கள் திரளாக பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர்.