Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொடுமணல் மாரியம்மன் கோவில் ... எருமப்பட்டி கோவில் கும்பாபிஷேக விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊத்துக்குழி கருங்கற்களில் சுவாமி சிலைகள்: கும்பாபிஷேக சீசனால் விற்பனை அமோகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2016
02:02

ஓசூர்: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் இருந்து கொண்டு வரப்படும் கருங்கற்களில்
செய்யப்படும் விநாயகர், பெருமாள் மற்றும் அம்மன் சிலைகள், கும்பாபி?ஷக சீசனால் அதிகளவு விற்பனையாகி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில், ஸ்வாமி சிலைகள் செய்யும் பணி
பிரதானமாக நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் மலை சூழ்ந்த பகுதி என்ற போதும், இங்கு
கிடைக்கும் கருங்கற்களை கொண்டு ஸ்வாமி சிலைகள் செய்ய முடிவதில்லை. இங்குள்ள
கருங்கற்கள் மிகவும் பலம் வாய்ந்தது என்பதால், இந்த கற்களில் சிலை செய்யும் போது, சிலை முழு உருவம் பெறுவதற்கு முன்பு உடைந்து விடும். அதனால், ஓசூர் பகுதியில் ஸ்வாமி சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் இருந்து கருங்கற்களை வாங்கி வருகின்றனர். பூமிக்குள் இருந்து வெட்டி எடுக்கப்படும் கருங்கற்களில், விநாயகர், பெருமாள், அம்மன், முருகன், அனுமன் உள்ளிட்ட பல்வேறு ஸ்வாமி சிலைகளை செய்து, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து, ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மாருதி நகர் பகுதியில், ஸ்வாமி சிலைகள் செய்து, விற்பனை செய்யும் முருகானந்தம் கூறியதாவது: ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், ஆறு மாத காலத்திற்கு கோவில் திருவிழா மற்றும் கும்பாபிஷேகம் அதிகளவு நடக்கும். இந்த காலக்கட்டத்தில் ஸ்வாமி சிலை விற்பனை நன்றாக இருக்கும். வாரத்தில், 10 முதல், 20 சிலைகள் விற்பனையாகும். இதன் விலை, 3,000 ரூபாயில் இருந்து, 50 ஆயிரம் ரூபாய் வரை, நான்கு அடி உயரத்தில் சிலைகளை செய்து கொடுக்கிறோம். அம்மன் சிலைகள் தான் தற்போது அதிகளவு விற்பனையாகிறது. அதுதவிர, பெருமாள், முருகன், விநாயகர், நந்தி, ஹனுமன், லட்சுமி நரசிம்மர் போன்ற சிலைகளும் விற்பனை செய்யப்படுகிறது. ஊத்துக்குளியில் இருந்து கிடைக்கும் கற்கள் மூலம் மட்டுமே, சிலைகளை செய்ய முடியும். எங்களிடம் விற்பனையாகும் அனைத்து சிலைகளும் ஒரே கல்லில் செய்யப்படுவது தான். குடும்ப தொழிலாக இதை செய்து வருகிறோம். ஒரு சிலை ஆர்டர் கொடுத்தால், ஒரு மாதத்தில் இருந்து மூன்று மாதத்திற்குள் முடித்து கொடுத்து விடுவோம். தற்போது, கும்பாபி?ஷக சீசன் என்பதால் விற்பனை நன்றாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 12ம் தேதி ... மேலும்
 
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar