Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஹயக்கிரீவர் பூஜை 1,200 மாணவர் பதிவு அருணாச்சலேஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமீயச்சூர் கோவில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2016
02:02

திருவாரூர்: பேரளம் அருகே, திருமீயச்சூர் லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி கோவில்
தேரோட்டம், பிப்.,19ல் நடந்தது.

திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே, திருமீயச்சூர் கிராமத்தில், லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், வேளாக்குறிச்சி ஆதினம் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலின் பிரம்மோற்சவ விழா, கடந்த 4ம் தேதி, விக்னேஸ்வரர் பூஜையுடன் துவங்கியது. மறுநாள் கொடியேற்றம் நடந்தது. இதை தொடர்ந்து, தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்து வந்தது. கடந்த 10ம் தேதி, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.லலிதாம்பிகை மேகநாத சுவாமி, நேற்று முன்தினம் இரவு, தேருக்கு எழுந்தருளினார். பிரம்மோற்சவத்தின் முக்கிய திருவிழாவான தேரோட்டம், பிப்.,19ல் நடந்தது. காலை 6:15 மணிக்கு, தேரோட்டத்தை, ஸ்ரீலஸ்ரீ சத்தியஞானமகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வடம்பிடித்து துவக்கி வைத்தார். பின், பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர். தேர் நிலையில் இருந்து, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக வலம் வந்து, மாலையில் நிலையைவந்தடைந்தது. கடந்த, 1969ம் ஆண்டிற்கு பின், தற்போது, தேரோட்டம் நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. பத்தாம் நாள் விழாவாக, இன்று காலை நடராஜர் வீதிவலம் வந்து தீர்த்தம் கொடுத்தருளுதல், மதியம், பஞ்சமூர்த்திகள் சூரிய புஷ்கரணியில் தீர்த்தம் கொடுத்தருளுதல் நடைபெற உள்ளன. சண்டிகேஸ்வரர் உற்சவமும், பிப்.,21 மறுநாள், உற்சவ பிராயச்சித்த அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில் ஊஞ்சலம் உற்சவம் நடந்தது.புதுச்சேரி காந்தி வீதியில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: பாம்பு, ஏணிகளுடன் இருக்கும் பரமபத விளையாட்டின் வாயிலாக, தேர்தல் விதிமுறைகள் மற்றும் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர் மற்றும் வரதராஜபெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீராமபுரம்: ஸ்ரீராமபுரம் சுதந்திர நகர் திரவுபதி அம்மன் கோவிலில், அக்னிகுண்ட கரக திருவிழா மற்றும் ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar