ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தெப்பத்தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23பிப் 2016 12:02
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மாசிமகத்தை முன்னிட்டு நேற்றிரவு
தெப்பதேரோட்டம் நடந்தது.இதைதொடர்ந்து நேற்று இரவு 7.30 மணிக்கு கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாடவீதிகள் வழியாக நாடகசாலை தெரு திருவேங்கடமுடையான் சன்னிதிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் நடக்க திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அங்கிருந்து திருமுக்குளத்தின் தெற்குபகுதி வழியாக எண்ணெய்காப்பு மண்டபம் வந்தடைந்தனர். மின்விளக்குகள்அங்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட தெப்பதேரில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினார். இரவு 8.30 மணிக்குமேல் தெப்ப தேரோட்டம் நடக்க , தேரானது மூன்று முறை வலம் வந்தது .குளத்தை சுற்றி அலங்கரிக்கப்பட்டிருந்த மின்விளக்குகள் ஜொலிக்க, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்றும் தெப்பம் ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் ராமராஜா செய்திருந்தனர். இதுபோல் இன்றும், நாளையும் இரவு 7 மணிக்கு தெப்பதேரோட்டம் நடக்கிறது.