Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுஷ்கோடியில் மகாமகம் தீர்த்தவாரி ... திருச்செந்தூர் மாசித்திருவிழா தேரோட்டம் திருச்செந்தூர் மாசித்திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூரில் மகாமகத் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூரில் மகாமகத் தீர்த்தவாரி

பதிவு செய்த நாள்

23 பிப்
2016
02:02

திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் நேற்று மகாமகத் தீர்த்தவாரி மற்றும் தெப்ப உற்சவம் நடந்தது.

மாசித்தெப்ப உற்சவம் பிப்.,13ல் துவங்கியது. நேற்று முன்தினம் வெண்ணெய்த்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் தெப்ப மண்டபத்திற்கு சுவாமி எழுந்தருளினார். பின், தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடந்தது. நேற்று அதிகாலை, பெருமாளுக்கு தங்கக் கருட சேவை, திருவீதி புறப்பாடு நடந்தது.காலை 6 மணிக்கு ஸ்ரீமகாமகக் கிணற்றில் சடாரிக்கு தீர்த்தவாரி நடந்தது. பின், கிணற்றின் தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.திருவீதி உலாவில் தங்கப்பல்லக்கில் தேவியருடன் சுவாமி தெப்ப மண்டபம் எழுந்தருளினார். மதியம் 1.30 மணிக்கு தெப்பத்தில் ஒரு முறை வலம் வந்தார். பின், மீண்டும் தெப்ப மண்டபம் எழுந்தருளல் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் உற்சவரை தரிசனம் செய்தனர்.

தெப்ப உற்சவத்தை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள், தெப்பக்குளக்கரையில் விளக்கேற்றினர். இன்று தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது.
வெயிலால் அவதிதெப்ப உற்சவத்திற்கு வந்த பக்தர்கள் கடும் வெயிலால் அவதிப்பட்டனர். நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. இலவசத் தரிசன வரிசைக்கும் நிழற்கூரை இல்லை. முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் நிழல் தேடி அலைந்தது பரிதாபமாக இருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar